ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு !

by Web Team
0 comment

ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் சிக்கி 90 பேர் உயிரிழந்துள்ளனர்.பலரும் காணாமல் போயிருக்கின்றனர்.

கனமழை காரணமாக மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் நதிகள் அனைத்தும் நிரம்பி ஓடுகின்ற காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி காட்சியளிக்கின்றது.

ஜெர்மனி மட்டுமில்லாமல் பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ் திடீர் வெள்ளப் பெருக்கால் வீடுகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ் வெள்ளப் பெருக்கால் 700 பேர் வசித்து வந்த கிராமமே மூழ்கியதாக கூறப்படுகின்றது. தற்போது மேற்கு ஜெர்மனியில் 1500 பேர் காணவில்லை என்றும் கூறுகின்றனர். தற்போதைக்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி உதவியுள்ளன. பருவநிலை மாற்ற விளைவுகள் காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது என சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Related Posts

Leave a Comment