பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம்

by Lifestyle Editor
0 comment

ஜெய்சல்மேருக்கு அருகில் உள்ள காட்ஸிஸார் சாலையில் இந்த பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இது இனத்தார் கருவிகள், அரிதான தொல்படிவங்கள், புராதன பிரதிகள், வரலாற்றுக்கால நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் போன்றவற்றின் அற்புதமான சேகரிப்புகளைக் கொண்டுள்ளது.

கரால் என்றழைக்கப்படும் அக்காலத்திய ‘ஓபிய’ கலவைப்பெட்டி இங்கு பயணிகளை கவரும் அம்சமாக உள்ளது.

மேலும் பல அரிதான துணி வகைகள், கைவினைப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், கைப்பிரதிகள் போன்றவற்றையும் பயணிகள் இங்கு காணலாம்.

நகரத்திலிருந்து இந்த மியூசியத்திற்கு வருவதற்கு ரிக்ஷாக்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் கிடைக்கின்றன.

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு இந்த மியூசியம் திறந்து வைக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment