‘அண்ணாத்தே’ கிண்டல் செய்த இங்கி, வீராங்கனை..அஸ்வின் கொடுத்த நறுக் ரிப்ளை.. இனி வாயே திறக்கக்கூடாது!

by Lifestyle Editor
0 comment

லண்டன்: இங்கிலாந்து அணியை பாராட்டிய அஸ்வினை, அந்நாட்டு வீராங்கனை ஒருவர் கிண்டல் அடித்துள்ளது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஏற்கனவே 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 3வது டி20 போட்டியையும் கைப்பற்றியுள்ளது.

முதல் இன்னிங்ஸ்

செம்ஸ்போர்டில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன் எடுத்தது. தொடக்கம் சரியாக அமைந்த போதிலும், மிடில் ஆர்டர் சரியாக கைக்கொடுக்கவில்லை. அதிகபட்சமாக ஓப்பனிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி 51 பந்தில் 70 ரன் குவித்தார். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 36 ரன் எடுத்தார்.

இங்கிலாந்து வெற்றி

இதனையடுத்து 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க வீராங்கனை டேனியெல்லே வியாட் 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

மனமார்ந்த பாராட்டு

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்த அஸ்வினை, இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட் கிண்டலடித்துள்ளார். அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள் டேனி வியாட். இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.

கிண்டலடித்த வியாட்

இதற்கு ரிப்ளை செய்திருந்த டேனி வியாட், நன்றி அஸ்வின்!, ஒரு ஜாம்பவானிடம் இருந்து இது போன்ற வார்த்தைகள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் நாட்டு ஆடவர் அணிக்கு எதிராக விளையாட போகிறீர்கள். அதில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கட்டும் என ( குட் லக்) என சிரிக்கும் எமோஜியுடன் மட்டம் தட்டி குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி திறமையால் வெற்றி பெறும். அதிர்ஷ்டத்தை நம்பி இல்லை என ரசிகர்கள் பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

உடனடி பதிலடி

ஆனால் டேனி வியாட்டின் கிண்டலுக்கு சற்றும் குறையாமல் திருப்பி கொடுத்துள்ளார் அஸ்வின். டேனி வியாட்டின் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த அவர், நன்றி வியாட், நீங்கள் அடுத்ததாக விளையாடவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் உங்களுக்கும் அதிர்ஷ்டம் இருக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். வியாட் தெரிவித்த அதே வார்த்தைகளால் பதிலடி கொடுத்தது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Related Posts

Leave a Comment