மஞ்சள் பூசணிக்காய் கூட்டு

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள் :

மஞ்சள் பூசணிக்காய் – அரை கிலோ (நறுக்கியது)
கடலைப் பருப்பு – 100 கிராம்
தேங்காய்த் துருவல் – சிறிதளவு
தூளாக்கிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.

பின்னர் வேகவைத்த கடலைப்பருப்புடன் பூசணி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மஞ்சள் தூள், தேங்காய் துருவல், வெல்லம், சேர்த்து வதக்கி இறக்கி பரிமாறலாம்.

இந்த பூசணிக்கூட்டை சிறுவர்- சிறுமியர் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Posts

Leave a Comment