சுண்டைக்காய் தொக்கு

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் – அரை கப்
தனியா – 2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 1 கப்
தக்காளி – 4 (நறுக்கவும்)
கடலை எண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
கல் உப்பு – தேவையான அளவு
புளி கரைசல் – 2 டீஸ்பூன்
வெல்லம் – அரை டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் தனியா, தக்காளி ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.

பின்னர் அதனை ஆறவைத்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கடலை பருப்பு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுடன் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் வெந்தயம், வெல்லம் ஆகியவற்றை கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சுண்டைக்காயை கொட்டி லேசாக வதக்கவும்.

அதனுடன் அரைத்த விழுது, வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தொக்கு பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை 3-4 மணிநேரம் கழித்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

ஆரோக்கிய பலன்: இந்த தொக்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும். அல்சர் பிரச்சினை, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் குறையும். தொற்றுக்கிருமிகளின் தாக்கமும் குறையும். பற்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

Related Posts

Leave a Comment