ஊரடங்கு நீட்டிப்பு… வெளியானது அதிரடி அறிவிப்பு

by Lifestyle Editor
0 comment

புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன்பலனாக அம்மாநிலத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது.

இந்நிலையில் அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில், அங்கு தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் 50% சுற்றுலா பயணிகளுடன் சுற்றுலா தலங்கள் இயங்கலாம் என அறிவிக்கவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்கள் நடத்த தடை தொடரும் எனவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அங்கு கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கிவரும் நிலையில், அதே நடைமுறை இனியும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூலை 16 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவிருந்த நிலையில், தொற்று குறையாததாலும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்வி நிலையங்கள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Related Posts

Leave a Comment