தமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா உயிர்பலி

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.09 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.11 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 2,455பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,428 பேர் ஆண்கள், 1,030பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 26ஆயிரத்து 401ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 30ஆயிரத்து ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 272 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 55பேர் உயிரிழந்துள்ளார். 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,021 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,62,244ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளத

Related Posts

Leave a Comment