கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகிறதா? அமைச்சர் பதில்

by Lifestyle Editor
0 comment

நாளை பிற்பகல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கவிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க தடுப்புவிதிகளை பின்பற்றி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா இரண்டாம் அலை பரவலின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய தன்னார்வ அமைப்புகள் பெரிதும் உதவின. டெங்குவால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவைக்கை எடுத்துவருகிறது.

கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைபாட்டை விரைவில் முதல்வர் அறிவிப்பார். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஆகவே பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கையில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி திறப்பு, நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி விநியோகிப்பதை அதிக படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment