படா பாக்

by Lifestyle Editor
0 comment

படா பாக் எனும் இந்த பிரம்மாண்ட பூங்காவில் பட்டி ராஜ வம்சத்தினரால் எழுப்பப்பட்டுள்ள சாத்ரி என்றழைக்கப்படும் கட்டிடக்கலை அம்சம் பொருந்திய சமாதி மாடங்கள் நிறைந்துள்ளன.

இவற்றில் மஹரவால் ஜெயித் சிங் ராஜாவின் சமாதி மாடம் மிகப்புராதனமானதாக கருதப்படுகிறது.

இந்த படா பாக் எனும் பூங்கா ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.

இதில் சமாதி மாடங்களை தவிர்த்து ஜெயித் சர் தடாகம், ஜெயித் பந்த் அணை மற்றும் கோவர்தன் ஸ்தம்பம் போன்றவையும் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த அணை மற்றும் நீர்த்தடாகம் கட்டுவதற்கு உறுதியான கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சல்மேரிலிருந்து ஆட்டோ ரிக்ஷா அல்லது வாடகைக்கார்கள் மூலமாக பயணிகள் இந்த பூங்காவை அடையலாம்.

Related Posts

Leave a Comment