1.14 மணிநேர உரையாடல்..பல்வேறு வீரர்களின் வாழ்கை கதை..ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊக்கம் தந்த பிரதமர் மோடி

by Lifestyle Editor
0 comment

டெல்லி: ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கானொலி காட்சி மூலம் நீண்ட நேரம் உரையாடல் நடத்தினார்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இதற்காக தேர்வாகியுள்ள இந்தியாவை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் வரும் ஜூலை 17ம் தேதி டோக்கியோவிற்கு புறப்படுகின்றனர்.

வீரர்களுடன் சந்திப்பு

இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியாவில் இருந்து 18 விளையாட்டு பிரிவுகளின் கீழ் 126 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவில் இருந்து இவ்வளவு அதிகமானோர் ஒலிம்பிக்கிற்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று 126 வீரர்,வீராங்கனைகளுடனும் காணொலி காட்சி மூலம் உரையாடல் நடத்தினார்.

முதல் உரையாடல்

இன்று மாலை 5 மணிக்கு நடந்த இந்த உரையாடலில், பிரதமர் மோடி முதலாவதாக வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் பேசினார். அவரிடம் தீபிகா குமார், நீங்கள் தான் உலகின் நம்.1 வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களின் சிரமங்கள் பற்றி நான் அறிவேன். உங்களின் சிறுவயது வாழ்கை எவ்வளவு கொடுமையாக இருந்தது என்பதும் எனக்குதெரியும். இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு வாழ்த்துகள் எனக்கூறினார்.

முன் உதாரணம்

அதன்பிறகு தடகள வீராங்கனை டூட்டி சண்ட்டிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த தேசம் முழுவதும் சண்ட் பதக்கத்தை ஏந்துவதை பார்க்க வேண்டும் எனக்கூறினார். இதன்பின்னர் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிடம், நீங்கள் இந்தியாவில் உள்ள பல இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு முன்னுதாரணம். உங்கள் கதை அனைவருக்கும் தூண்டுகோல் போன்றது எனக்கூறினார்.

சச்சினின் நிலைமையுடன் ஒப்பீடு

இதனை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமாரிடம் பிரதமர் மோடி பேசினார். ஆஷிஷ் ஒரு முக்கிய தொடரில் பங்கேற்றிருந்த போது தந்தையை இழந்தார். அவரின் வேதனைகளை கேட்டறிந்த மோடி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் நிலைமையுடன் ஆஷஷை ஒப்பிட்டார். ஏனென்றால் கடந்த 1999ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது சச்சின் தனது தந்தையை இழந்தார். எனினும் அவர் கஷ்டத்தை மீறி அந்த தொடரில் பங்கேற்று விளையாடினார்.

பல்வேறு எடுத்துக்காட்டுகள்

இவர்கள் மட்டுமல்லாது, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாளரிவன், சவுரப் சௌத்ரி, சரத் கமல் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகளிடம் பேசினார். சுமார் 1 மணி நேரம் 14 நிமிடங்கள் தொடர்ந்த இந்த உரையாடலில், வீரர்களின் பல்வேறு கதைகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

Related Posts

Leave a Comment