டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு

by Lifestyle Editor
0 comment

சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 பேரை உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணிகள் அனைத்து டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலமே நிரப்பப்படும். இந்நிலையில், இந்த ஆணையத்திற்குப் புதிதாக நான்கு உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எஸ் முனியநாதன் ஐஏஸ், பேராசிரியர் கே ஜோதி சிவஞானம், முனைவர் கே அருள்மதி, ஏ.ராஜன் மரியசூசை ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்த 4 உறுப்பினர்களும் பதவியேற்கும் நாளிலிருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment