காதல் கணவரை பிரிகிறாரா பிக்பாஸ் அனிதா சம்பத் ?..

by Lifestyle Editor
0 comment

சன் டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர், பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்.சி.சம்பத்தின் மகள் ஆவார். செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அவரின் செய்கையால் ரசிகளிடமிருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகளே வந்தன. இதையடுத்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கிடையே பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அனிதா. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத், தற்போது சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அதனால்தான் தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட்டுகளை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அனிதா சம்பத், தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் தீயாய் பரவி வந்தன. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனிதா, புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில்,”கூடவே இருந்தியே செவ்வாழை மொமென்ட்.. கன்டென்ட் இல்லனுனு இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்களா காஸிப் பேஜஸ்.. டெய்லி யூட்யூப்ல ஒன்னா விலாக் போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல” என ஜாலியாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அனிதா சம்பத் விவாகரத்து பஞ்சாயத்து இத்துடன் முடிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment